கல்லிடைக்குறிச்சியில் வேன் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அம்பாசமுத்திரம் புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(59). டெம்போ வேன் ஓட்டுநர். இவர், கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றாராம். கல்லிடைக்குறிச்சி கன்னடியன் கால்வாயை நெருங்கியபோது, எதிரே வந்த வேன் அவர் மீது மோதியதாம். இதில் படுகாயமடைந்த அவர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மாரியப்பன்இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து பேட்டையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அண்ணாமலை மகன் முருகனை கைது செய்து விசரிக்கின்றனர்.
மற்றொருவர் சாவு: கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்குப் பாப்பான்குளம் மயிலாடும் பாறைத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நம்பிராஜன்(41). இவரும், தனது உறவினர் கீழப்புலியூர் உச்சிமகாளித் தெருவைச் சேர்ந்த தளவாய் மகன் மாரியப்பன் என்பவருடன் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை மாலை தெற்கு பாப்பான்குளத்தில் இருந்து கீழப்புலியூர் சென்று கொண்டிருந்தனர். அய்யம்பிள்ளைகுளம் பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த வேன் நம்பிராஜன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இது தொடர்பாக கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் ஆசிர்வாதபுரம் வேதமுத்து மகன் தனபால் செல்வின் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! லாபத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்!!

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

