தமிழகத்தில் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் நடிகர் எஸ்.வி.சேகர்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தமிழகத்தில் கோயில் சிலை, நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கோயில் நிர்வாகப் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். வரும் தேர்தல் ஆன்மிகத்துக்கும், நாத்திகத்துக்குமானதாக இருக்கும். தமிழகத்தில் இனி தெய்வீக சின்னம் ஜெயிக்கும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சி செய்வதே சிறப்பானதாக இருக்கும்.
யோகாசனம் உடலுக்கு நல்லது என்பதை உணர்ந்தாலும், அதனை பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால் எதிர்க்கும் மனநிலை பலருக்கும் உருவானது. அதுபோன்றுதான் பல்வேறு பிரச்னைகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது. இந்து மத பெருமையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாகும். நம்பிக்கை வைத்தால் அனைத்திலும் வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
தொடர்ந்து, இந்து தர்ம மேம்பாட்டுக்கான சேவை அமைப்பு சார்பில் இந்து மதத்தின் மகிமைகளையும், ஆன்மிக உன்னதங்களையும் முன்னிறுத்தி இந்துக்களை ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற கருத்தரங்கில் எஸ்.வி.சேகர் பேசினார். சென்னை வேங்கடகிருஷ்ணன், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், கல்யாண ராமன், ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்

காங்கிரஸ் தலைவா்கள் மன சமநிலையை இழந்துவிட்டனா்: ரேகா குப்தா

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

