/

ஏப். 21இல் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் 15 வட்டங்களில் சனிக்கிழமை (ஏப். 21)நடைபெறுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:59 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் 15 வட்டங்களில் சனிக்கிழமை (ஏப். 21)நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (ஏப். 21) 15 வட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெற உள்ளது. 
அதன்படி, திருநெல்வேலி வட்டம் வண்ணான்பச்சேரி,  சங்கரன்கோவில் வட்டம் களப்பான்குளம்,  பாளையங்கோட்டை வட்டம் கொங்கந்தான்பாறை,  தென்காசி வட்டம் முத்துமாலைபுரம்,  செங்கோட்டை வட்டம் பிரானூர்,  சிவகிரி வட்டம் விஸ்வநாதப்பேரி, வீரகேரளம் புதூர் வட்டம் பரங்குன்றாபுரம்,  ஆலங்குளம் வட்டம் குறிப்பன்குளம்,  அம்பாசமுத்திரம் வட்டம் வாகைக்குளம்,  நான்குனேரி வட்டம் சிங்கிகுளம்,  ராதாபுரம் வட்டம் பரமேஸ்வரபுரம்,  கடையநல்லூர் வட்டம் திருவேட்டநல்லூர்,  திருவேங்கடம் வட்டம் சுந்தரரேசபுரம், மானூர் வட்டம் வடக்கு தாழையூர், சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஆகிய கிராமங்களில் நடைபெறும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.