விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை  கட்டமைப்புகளை பலப்படுத்த கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளைப் பலப்படுத்த மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:56 am IST

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளைப் பலப்படுத்த மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் வேணுகோபால், சிவசுப்பிரமணியன், ஆசாத்பாதுஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: 
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து வருகிறது. 
இதுகுறித்து மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே எங்களை இடைநீக்கம் செய்துள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம். 
இந்நிலையில் இம்மாதம் 20ஆம் தேதி திருநெல்வேலிக்கு வரும் கட்சியின் மாநிலத் தலைவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் தொண்டர்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.