ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கீழப்பாவூர் வட்டாரத் தலைவர் சிவராஜன் தலைமை வகித்தார். வட்டாரப் பொருளாளர் அறிஞர் முன்னிலை வகித்தார். செயலர் முருகேசன் வரவேற்றார். மாவட்டச் செயலர் வேலுமயில் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியமாக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


