ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

அகில இந்திய வேலைநிறுத்தம்: தமிழக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு ஆதரவு

அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான

Updated On :

அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் மாநிலச் செயலர் வைகை குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய அளவில் போக்குவரத்துத் தொழிலை தனியார், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து, போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மத்திய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த மசோதாவால் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன மெக்கானிக், டயர் பஞ்சர், டிங்கர், பெயின்டர், பாடி பில்டிங் போன்ற தொழிலில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.  வாகன விற்பனை, பதிவு, தகுதிச் சான்று போன்றவற்றை இனி பெரு நிறுவனங்களே மேற்கொள்ளும். இது ஆட்டோ, டாக்சி, வேன், லாரி போன்ற வாகன ஓட்டுநர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் பெரும் பொருள் செலவை ஏற்படுத்தி தொழிலைவிட்டு விலகச் செய்யும் நிலையை ஏற்படுத்தும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளில் செய்யப்படும் முறைகேடான வசூலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எங்கள் கூட்டமைப்பும் பங்கு பெறும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.