ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

25.10.1976: எழும்பூர் அருகே இரு ரயில்கள் மோதல் விபத்து தவிர்க்கப்பட்டது

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

25.10.1976 - Dinamani

Updated On :

சென்னை, அக். 24 - சென்னை எழும்பூரில் இன்று காலை நேரவிருந்த கோர ரயில் விபத்து ஒரு டிரைவரின் சமயோசிதத்தினால் தவிர்க்கப்பட்டது.

இன்று காலை ரயில் ஊழியர்களின் விசேஷ ரயிலொன்று தாம்பரத்திலிருந்து மெயின் லயனில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில்வே ஊழியர்கள் ராஜஸ்தான் செல்பவர்கள். காலை 9-30 மணிக்கு வந்த இந்த ரயில் எழும்பூர் மின்சார ரயில் பிளாட்பாரத்துக்குச் செல்ல வேண்டும். தாம்பரத்திலிருந்து மற்றொரு மின்சார ரயில் எழும்பூரை நோக்கி வந்தது. இந்த ரயிலும் அதே பிளாட்பாரத்துக்குச் செல்ல வேண்டியதாகும். மின்சார ரயில் எழும்பூருக்கு வெளியே அவுட்டரில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்களின் விசேஷ ரயில் எழும்பூர் மின்சார ரயில் நிலைய பிளாட்பாரத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

விசேஷ ரயில் கெங்குரெட்டி சாலை லெவல் கிராஸிங்கைக் கடந்தபோது அதே பாதையில் எதிர்த் திசையில் பீச்சிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் வருவதை டிரைவர் கண்டார். புறநகர் மின்சார ரயில் பாதையில் செல்லவேண்டிய அந்த ரயில், மெயின் லயனில் வந்து கொண்டிருந்தது.

ரயில் ஊழியர்கள் விசேஷ ரயிலின் டிரைவர் தமது எஞ்சின் முன்பக்கமுள்ள பிரகாசமான விளக்கைப் போட்டுவிட்டு எஞ்சினிலிருந்து கீழே குதித்து எதிர்த் திசையில் வேகமாக வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு கைகளை ஆட்டிக் கூச்சல் போட்டுக்கொண்டு ஓடினார். எதிர்த் திசையில் வந்த மின்சார ரயிலின் டிரைவர் அதைக் கவனித்துவிட்டு உடனே ரயிலை நிறுத்திவிட்டார். விசேஷ ரயிலின் டிரைவர் சமயோசிதத்தினால் நேரவிருந்த கோர விபத்து தவிர்க்கப்பட்டது.

ஒரே பாதையில் எதிர்த்திசையில் இரு ரயில்களும் ஓட அனுமதித்ததற்கு யார் பொறுப்பு என்பதை அறிவதற்கு விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இன்று மாலை வெளியான ரயில்வே பத்திரிகை குறிப்பு கூறுவதாவது: சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களில் ஒன்று எழும்பூரிலிருந்து சேத்துப்பட்டுக்கு புறப்பட்டு சென்ற போது சிவப்பு (அபாய அறிவிப்பு) சிக்னலை கடந்து சென்றது. அப்போது ஒரு 'பாயின்ட்' சேதமடைந்தது.

அதன் விளைவாக சென்னை கடற்கரை - சேத்துப்பட்டு இடையே காலை 9-30 மணி முதற்கொண்டு மின்சார ரயில் சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் சேத்துப்பட்டு தாம்பரம் இடையே மின்சார ரயில் சர்வீஸ் தொடர்ந்து நடத்தப்பட்டது. சென்னை -கடற்கரை - தாம்பரம் இடையே வழக்கமான மின்சார ரயில் சர்வீஸ் பகல் 12 மணிக்கு மீண்டும் துவங்கியது.

Summary

25.10.1976: Two trains collide near Egmore, accident averted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.