வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

சென்னை - அரக்கோணம் ஏசி ரயில் சேவை தொடக்கம்! கட்டண விவரம் வெளியீடு!

சென்னை - அரக்கோணம் இடையே இயக்கப்படும் குளிர்சாதன ரயில் சேவையின் கட்டண விவரம் குறித்து...

ac electric train

குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் - கோப்புப்படம்

Updated On :

அரக்கோணம் - சென்னை இடையே குளிா்சாதன பெட்டிகளுடன் இயங்கும் மின்சார ரயில் சேவை இன்று (அக். 23 ) தொடங்கப்பட்டுள்ள நிலையில், டிச. 24 வரை சோதனை ஓட்டமாக இயக்கப்பட உள்ளது.

12 பெட்டிகளுடன் உள்ள இந்த மின்சார ரயில் வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் இயக்கப்படும். இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்த பின்னர் பெறப்படும் ஆய்வறிக்கைகளை பொறுத்து இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகும்.

காலை 6.30 மணியளவில் ஆவடியில் புறப்படும் இந்த குளிர்சாதன மின்சார ரயில் அரக்கோணம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று அரக்கோணத்தை 7.45க்கு சென்றடையும்.

பிறகு காலை 8.00 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த குளிர்சாதன மின்சார ரயில் திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

காலை 9.40-க்கு தென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த குளிர்சாதன மின்சார ரயில் ஆவடி வரையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று ஆவடிக்கு 10.25-க்கு சென்று சேரும்.

Story image

மாலை 5.25-க்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு வழியில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கலும் நின்று மாலை 6.10-க்கு சென்னை சென்ட்ரல் புற்நகர் ரயில் நிலையத்தை அடையும். மாலை 6.30-க்கு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து அரக்கோணத்திற்கு புறப்படும் இந்த ரயில் வழியில் பேசின்பிரிட்ஜ், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று 7.55-க்கு அரக்கோணத்தை அடையும்.

அரக்கோணத்தில் இருந்து இரவு 8.10-க்கு புறப்படும் குளிர்சாதன மின்சார ரயில் திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று ஆவடியை 9.10-க்கு அடையும்.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்ல அதிகபட்சமாக ரூ. 230, வில்லிவாக்கம் வரை செல்ல குறைந்தபட்சமாக ரூ. 35 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் இருந்து பட்டாபிராம் வரை செல்ல ரூ. 60, திருவள்ளூருக்கு ரூ. 90 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Summary

The electric train service between Arakkonam and Chennai with refrigerated compartments was launched today (Oct. 23) and will be operated on a trial run until Dec. 24.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.