சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே அக். 23 முதல் குளிர்சாதன மின்சார ரயில்!
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது குறித்து...

குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் - கோப்புப்படம்
சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் 12 பெட்டிகள் அடங்கிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வரும் அக். 23 ஆம் தேதி முதல் டிச. 24 ஆம் தேதி வரை திங்கள் முதல் வெள்ளி வரை சோதனை அடிப்படையில் குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குளிர்சாதன மின்சார ரயில்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனிகள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து குளிர்சாதன மின்சார ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பயணிக்கும் பணியாளர்கள், மாணவர்களின் வசதிக்காக புதிய ஏசி மின்சார ரயில் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது
இந்த ரயில், பயணிகள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Southern Railway has announced that a 12-coach air-conditioned electric train will be introduced on the Chennai - Arakkonam route.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


