சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!

சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கப்படுவது பற்றி...

local train

மின்சார ரயில் - கோப்புப் படம்

Published On :

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்ட நிலையில், பூங்கா ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10.40 மணியளவில் புறப்பட்டபோது, ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தைவிட்டு விலகி தடம் புரண்டது.

இதனைத் தொடர்ந்து, தாம்பரம் - கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தாம்பரம், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதனால், தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இதையடுத்து, சென்னை கடற்கரைக்கு பதிலாக பூங்கா மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரையிலிருந்து மற்றொரு வழித்தடத்திலும் சில ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ரயிலின் பெட்டியைத் தண்டவாளத்தில் நிறுத்தி சரி செய்யும் பணிகளில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Trains to Tambaram and Chengalpattu are being operated from Chennai Park!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER