மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தது குறித்து...

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடக்கி வைக்கும் முதல்வர் விஜய் / துளி இலச்சினை - DIPR
மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று (அக். 21) தொடக்கிவைத்தார். துளி என்ற மழைநீர் இலச்சினையையும் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை காமராஜர் சாலையில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரசாரத் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக துளி என்ற இலச்சினையையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மழை நீரை பாதுகாப்பது என்பது நம் மண்ணையும், நம் வாழ்வையும் பாதுகாப்பதாகும் என்பதைக் குறிப்பிடும் வகையில் விழிப்புணர்வு விடியோ ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ்மோகன், மரிய வில்சன், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து, அதை பெரும் மக்கள் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு 24 ஆண்டுகள் ஆன நிலையில், பல இடங்களில் அதன் கட்டமைப்புகள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைப்பதற்கான பணிகளை தவெக அரசு மேற்கொண்டுள்ளது.
மழைநீர் சேமிப்பு திட்ட மறுசீரமைப்பின் நோக்கம்
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள பழைய மழைநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, சுத்தம் செய்து, தூர்வாரி, உடைந்ததை சரி செய்தல்.
புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல்: வீட்டின் கூரை (Roof Top Harvesting) மற்றும் மாடிகளில் விழும் மழை நீரை சேமிப்பது (Ground Water Recharge) புதிய கட்டடங்களுக்கு மட்டுமல்லாது, இனி பழைய கட்டடங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை மக்களின் சொந்த பொறுப்பாக மாற்றுவது.
தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
Summary
Rain water conservation awareness campaign launched by Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


