
குற்றாலத்தில் படகு குழாமுக்கு பூட்டு: பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்
குற்றாலம் வெண்ணைமடைகுளத்தில் அமைந்துள்ள படகு குழாமில் பணிபுரியும் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றாலம் வெண்ணைமடைகுளத்தில் அமைந்துள்ள படகு குழாமில் பணிபுரியும் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றாலம்-ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குற்றாலம் கிளை சார்பில் படகு குழாம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இரண்டுபேர் செல்லும் துடுப்பு, மிதிபடகுகள், நான்குபேர் செல்லும் துடுப்பு மற்றும் மிதி படகுகள் மற்றும் தனிநபர் செல்லும் கயாக் வகை படகுகளும் உள்ளன. குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துவிட்டு பொழுதுபோக்கிற்காக செல்லும் முக்கியமான இடங்களில் படகு குழாமும் ஒன்று.
இந்நிலையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் குற்றாலம் கிளை மேலாளராக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற மகேஷ்குமார் தங்களை மரியாதைக்குறைவாக நடத்துவதாகக் கூறி, படகு குழாம் பணியாளர்கள் படகு குழாமை பூட்டி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். இதுகுறித்து மேலாளரிடம் கேட்டபோது, பணியாளர்கள் சீருடையில் வரவேண்டும், பாதுகாப்பு உடையணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றார் அவர்.
இதையடுத்து, மேலாளர் மற்றும் பணியாளர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, படகு குழாம் பணியாளர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





