நெல்லையில் அதிமுக மாவட்டச் செயலருக்கு வரவேற்பு
திருநெல்வேலியில் அதிமுக மாநகர் மாவட்டச் செயலராக நியமனம் செய்யப் பட்டுள்ள தச்சை ந. கணேசராஜாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் அதிமுக மாநகர் மாவட்டச் செயலராக நியமனம் செய்யப் பட்டுள்ள தச்சை ந. கணேசராஜாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுகவில் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் முத்தையா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்றதால் அப்பதவி கடந்த ஒன்றரை ஆண்டாக காலியாக இருந்தது. இந்நிலையில், பொருளாளர் பதவி வகித்துவந்த தச்சை ந. கணேசராஜா மாவட்டச் செயலராக நியமனம் செய்யப் பட்டார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர், கணேசராஜா ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் சந்திப்பு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சந்திப்பில் உள்ள அண்ணா சிலை, கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்டச் செயலர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சிகளில், மாநில ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, எம்.பி.க்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், அ. மனோகரன், அமைப்புச் செயலர் சுதா கே. பரமசிவன், அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முருகேசன், முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம், மாநில கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் கண்ணன், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் ப. இளமதி, பகுதிச் செயலர்கள் மாதவன், மோகன், ஹயாத், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலர் மருதூர் கே. ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மாவட்டச் செயலர் கூறியது: கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க முயற்சி எடுப்பேன். கட்சியில் அனைவரையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

