முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு பூலித்தேவன் பெயர் சூட்ட வலியுறுத்தல்

திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பூலித்தேவன் பெயரைச் சூட்ட வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Published On :

திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பூலித்தேவன் பெயரைச் சூட்ட வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் சேகர்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இராஜசேகர் பாண்டியன், மாவட்டப் பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநிலப் பொறுப்பாளர் முத்துராமலிங்கம், மாநிலப் பொருளாளர் பெருமாள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அமைப்பின் மாநில அமைப்புச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ள சேகர்பாண்டியனுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
தீர்மானங்கள்: திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு பூலித்தேவன் மாளிகை எனப் பெயர் சூட்ட வேண்டும்; ஆறாம் வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் சேர்க்க வேண்டும்; தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்; மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும்; அக். 30இல் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்க வேண்டும்; சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் தேவர் சிலை வைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.