பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவை அளிக்கும் திட்டம் இம் மாதம் 21 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பிற வங்கிகளில் உள்ள அனைத்து வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட், பிற வங்கிக் கணக்குக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தில் பாளையங்கோட்டை, களக்காடு, பத்தை, படலையார்குளம், சிங்கம்பத்து அஞ்சலகங்களில் இம் மாதம் 21 ஆம் தேதி முதல் இத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அஞ்சல் துறையின் வங்கி சேவை குறித்த விழிப்புணர்வுப் பேரணி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் தலைமை வகித்தார். உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கள் வேதராஜன், பொன்னையா, குமரன், இந்திய அஞ்சல் பே மண்ட்ஸ் வங்கி மேலாளர் விஜய் ,தலைமை அஞ்சல் அதிகாரி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.