பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வரும் துணை முதல்வர், அமைச்சர்களை 1,000 கார்களில் சென்று வரவேற்க முடிவு செய்துள்ளதாக மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை கணேசராஜா தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா வருகிற செப். 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அது தொடர்பான அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலர் சுதா பரமசிவன், விஜிலா சத்யானந்த் எம்.பி., அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக தச்சை கணேசராஜா கூறியது: பூலித்தேவன் பிறந்த நாள் விழா அவருடைய சொந்த ஊரான நெற்கட்டும் செவலில் வருகிற 1ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், காமராஜ், செல்லூர் ராஜு, உதயகுமார், விஜயபாஸ்கர், மணிகண்டன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, வி.எம்.ராஜலட்சுமி, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
துணை முதல்வர், அமைச்சர்களுக்கு செப்.1ஆம் தேதி காலையில் கரிவலம்வந்தநல்லூரில் வரவேற்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக மாநகர் மாவட்டம் சார்பில் 1,000 கார்களில் செல்லவிருக்கிறோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெங்களூருக்கு மேக்கேதாட்டு தேவையே இல்லை! கர்நாடக அணையில் பயன்படுத்தாமல் கிடக்கும் தண்ணீர்!

முதுமையைத் தடுக்க வழி இருக்கா? புதிய ஆய்வு சொல்லும் சுவாரசிய தகவல்! | Ariviyal Aayiram

பிரதமருக்கு யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை: அமித்ஷா பேச்சு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


