வாசுதேவநல்லூரில் வீட்டு மாடியறையில் திடீரென பரவிய தீயால் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முழுவதுமாக எரிந்து சேதமானது.
வாசுதேவநல்லூர், கீழரத வீதி சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் முனியாண்டி(56). இவரது வீட்டின் மாடியறையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த, வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து)செல்வமுருகேசன் தலைமையிலான தீயணைப்புப் படையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். சேதமான மரக்கட்டில், பீரோ உள்ளிட்ட பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனவும், மின்கசிவால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சில்லறைக் கடைகளில் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! பொது மக்கள் அவதி!

அப்பா X மாமனார்! சட்டசபையா? குழாய் சண்டையா? சார்லஸ் மார்ட்டின் பேட்டி | TVK

உ.பி.: தன்னைப் பார்த்துக் குரைத்த நாயைச் சுட்டுக்கொன்ற நபர்!

பெங்களூருக்கு மேக்கேதாட்டு தேவையே இல்லை! கர்நாடக அணையில் பயன்படுத்தாமல் கிடக்கும் தண்ணீர்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


