அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். பாளையங்கோட்டை, தென்காசியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கமலேஷ் சந்திரா பரிந்துரையை 1-1-2016 முதல் அமல்படுத்த வேண்டும்; பணிக்கொடையை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்; குழுக் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்; ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு வேலை நேரத்தை உயர்த்தி சிவில் அந்தஸ்து வழங்க வேண்டும்; குழந்தைகள் பராமரிப்புப் படியாக ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரம்பற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, திருநெல்வேலி கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். தொடர்ந்து பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கோட்டச் செயலர் ஐ.ஞானபாலசிங், அம்பாசமுத்திரம் கிளைச் செயலர் ஏ.ராஜராஜன், ஜேக்கப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பறக்கும் ரயில் பாதையை சென்னை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் சிக்கிய மென் பொறியாளிரிடம் விசாரணை: கேரள போலீஸாா் சென்னையில் முகாம்

கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தற்கொலை

ராணிப்பேட்டையில் காவல்துறை கழிவு வாகனங்கள் ஏலத்தில் ரூ. 4.5 லட்சம் வருவாய்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


