ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கிராம நிர்வாக அலுவலர்கள் நெல்லையில் பேரணி

கிராம நிர்வாக அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கிராம நிர்வாக அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், உள்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்துவிதமான பட்டா மாறுதல்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரையை கட்டாயமாக்குதல் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 7ஆம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை மனுவை  மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அளித்தனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.முத்துசெல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.குமார் பேரணி விளக்கவுரை நிகழ்த்தினார். மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலர்கள் சி.அருணாசலம், கே.ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் அருள்மாரி நன்றி கூறினார். இந்தப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் இருந்து சுமார் ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.