கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்திற்கு முயன்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 624 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது மின்வாரிய அலுவலகம் அருகே தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா காசிதர்மம் அருகே உள்ள பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதை கண்டித்தும், வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப் பகுதியில் அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே திங்கள்கிழமை காலை நூற்றுக்கணக்கான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திரண்டனர்.
அங்கு, வட்டாட்சியர் அலுவலகத்தை நகரப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி, மாநிலச் செயலர் முகம்மதுபைசல், மாவட்ட தலைவர் ஜலாலுத்தீன், மாவட்ட செயலர் சுலைமான், பொருளாளர் செய்யது மசூது, கிளை நிர்வாகிகள் குறிச்சி சுலைமான், அப்துல்ஜப்பார், அப்துல்காதர், பாருக், அன்ஸாரி, குல்லிஅலி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு, அங்கிருந்து வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக அமைப்பினர் செல்ல முயன்றனர். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீஸார் 193 பெண்கள் உள்பட 624 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
ரஜினிகாந்த் 173 படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


