கோ-ஆப்டெக்சில் கைத்தறிச் சலுகைத் திட்டம்

திருநெல்வேலி சந்திப்பு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 2 வாங்கினால் ஒன்று எனும் இலவசத் திட்டத்தில் கைத்தறி துணிகள் விற்பனை  புதன்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

திருநெல்வேலி சந்திப்பு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 2 வாங்கினால் ஒன்று எனும் இலவசத் திட்டத்தில் கைத்தறி துணிகள் விற்பனை  புதன்கிழமை தொடங்கியது.
கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில்,  மாநகர காவல் உதவி ஆணையர் கே. மாரிமுத்து குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். அதை, ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் ஜெ. சுனிதா பெற்றுக்கொண்டார்.  நிர்வாகக்குழு உறுப்பினர் எம். மரியஅந்தோணி முன்னிலை வகித்தார்.
இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எம். சண்முகசுந்தரம் கூறியது: கைத்தறி துணிகள் 2 வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் 2012 இல் அறிமுகம் செய்யப்பட்டது.  வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை விற்பனை செய்யும் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 
பாரம்பரிய வடிவமைப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள், ஆர்கானிக் புடவைகள், மென்பட்டு புடவைகள், காட்டன் சேலைகள், போர்வை, படுக்கை விரிப்பு, வேஷ்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, லினன் சட்டை உள்ளிட்ட அனைத்து ரகங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
2017 இல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 7 விற்பனை நிலையங்களில் இத்திட்டத்தில் ரூ. 1.05 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. காந்திமதி விற்பனை நிலையத்தில் ரூ. 56.51 லட்சத்துக்கு துணிகள் விற்பனை ஆனது. நிகழாண்டு காந்திமதி விற்பனை நிலையத்தில் ரூ. 72 லட்சதில் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இந்நிகழ்ச்சியில், கோஆப்டெக்ஸ் மேலாளர் பி. கனகசபாபதி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com