டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:39 am

DIN

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதுகலை மற்றும் ஆய்வுக் கணினி அறிவியல் துறை சார்பில், "கணினி கணக்கீட்டு நுண்ணறிவு' எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்தார்.
பன்னாட்டு நூல் குறியீட்டு எண், பன்னாட்டு ஆய்வு இதழ் குறியீட்டு எண் ஆகியவற்றுடன் கூடிய இதழ்கள் வெளியிடப்பட்டன. அரசு உதவிபெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் வாழ்த்திப் பேசினார். 
கேரள பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் டி. முகம்மது நூருல் முபாரக், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஏ. சுருளியாண்டி,  தூய யோவான் கல்லூரிப் பேராசிரியை  சஃபிஷ் மேரி ஆகியோர் பேசினர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 
துறைத் தலைவர் எஸ். ஷாஜூன் நிஷா வரவேற்றார். பேராசிரியை தஸ்னீம் பாசிலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியர்கள் உமா தேவி, ரோஸ்லின் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.