பேட்டையில் பாஜக சாதனை விளக்கக் கூட்டம்
திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் பாஜக சார்பில் சாதனை விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.


திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் பாஜக சார்பில் சாதனை விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் திருநெல்வேலி மண்டல பொதுச் செயலர் மாரியப்பன் வரவேற்றார். தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பொன்அழகுராஜ், மாவட்ட துணைத் தலைவர் குருசாமி, மாவட்டச் செயலர் குருமணிகண்ட மகாதேவன் உள்ளிட்டோர் பேசினர்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இலவச எரிவாயு இணைப்புத் திட்டம், ஊழல் மற்றும் பயங்கரவாத சக்திகளை ஒடுக்க கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம் உள்ளிட்டவை குறித்து வீடுவீடாக எடுத்துக் கூறி, 2019, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க மக்களைக் கோருவது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
பாஜக நிர்வாகிகள் வெங்கடேஷ், துரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். கார்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...