வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாவூர்சத்திரம் சந்தையில் மிளகாய் விலை உயர்வு

பாவூர்சத்திரம் காய்கனி சந்தையில் மிளகாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 2:04 am

பாவூர்சத்திரம் காய்கனி சந்தையில் மிளகாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாவூர்சத்திரம் காமராஜர் காய்கனி சந்தைக்கு கீழப்பாவூர்,  சுரண்டை,  ஆலங்குளம்,  மானூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மிளகாய் விற்பனைக்கு வரும். கடந்த சில வாரங்களாக மைசூர் மற்றும் தமிழகத்தின் ஓசூர்,  ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மிளகாய் வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக வெளி மாவட்ட சந்தையில் இருந்து வரத்து குறைந்ததாலும்,  கீழப்பாவூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் குறைந்த அளவே அதாவது 1 டன் முதல் 3 டன் அளவே விற்பனைக்கு வந்தததால் மிளகாய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.