மணிமுத்தாறு அணையடிவாரப் பகுதியில் பயிரிட்டுள்ள நெல், மிளகாய், வாழை, கடலை உள்ளிட்ட பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதம் செய்ததால் பெரும் இழப்பு எற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை, அடிவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, ஆலடியூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வப்போது, கரடி, யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை சேதம் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு மணிமுத்தாறு அணை அடிவாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்த காட்டுப் பன்றிகள் ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த அரசமுத்து, ஆறுமுகம் மற்றும் மணிமுத்தாறைச் சேர்ந்த சிவா ஆகியோரது நிலங்களில் நுழைந்து மிளகாய், கடலை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்ததாம்.
இது குறித்து ஆறுமுகம் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக சரியான வகையில் மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது பருவமழை பெய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து, நெல், வெங்காயம், கடலை உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்துள்ளோம். வனப்பகுதியிலிருந்து காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் அவ்வப்போது புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன. இதனால் இதுவரை முதலீடு செய்த சுமார் ரூ. 1 லட்சம் வீணாகியுள்ளது.
எனவே உடனடியாக வனத்துறையினர் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யாமல் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் வனத்துறையினர், பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய ஆழப்பீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! - பெ. சண்முகம் கண்டனம்!

அப்பா... மகனே...
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


