பாளை. கல்லூரியில் ஜூன் 7இல் வளாக நேர்காணல்
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வரும் 7ஆம் தேதி வளாக நேர்காணல் நடைபெறுகிறது.


பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வரும் 7ஆம் தேதி வளாக நேர்காணல் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அக்கல்லூரி முதல்வர் எம்.முஹம்மது சாதிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சித் துறை, டிவிஎஸ் குழும நிறுவனம் ஆகியவை இணைந்து ஐசிஐசிஐ வங்கி நிறுவனத்துக்காக வரும் 7ஆம் தேதி காலை 10 மணிக்குக் கல்லூரி வளாகத்தில் விற்பனை அலுவலர் மற்றும் கிளைத் தொடர்பு அலுவலர் பணியிடத்திற்காக வளாக நேர்காணலை நடத்துகின்றன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சார்ந்த பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம். உள்ளிட்ட அனைத்துப் பாடங்களிலும் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் இவ்வளாக நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். வயது உச்சவரம்பு 26.
நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் தங்களின் சுய விவரம், புகைப்படம் ஆகியவற்றுடன் அன்றைய தினம் காலை 9 மணிக்குள் கல்லூரியில் பெயர்ப் பதிவு செய்துகொள்ள வேண்டும். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் மொழித்திறன் ஆய்வும், இணைய வழித்தேர்வும், அடுத்ததாக வளாக நேர்காணலும் நடைபெறும். இது ஆறாவது நேர்காணல் நிகழ்ச்சியாகும். கட்டணம் கிடையாது. தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு
ரூ. 1.6 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன், வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை ஒருங்கிணைப்பாளர் மு.இ. ஜாகீர் உசேன் மற்றும் டிவிஎஸ் குழும நிறுவனங்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், டி. நந்திதா செய்துவருகின்றனர். மேலும் விவரங்களுக்கு 9677763779 என்ற செல்லிடப்பேசி எண்ணில் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
அப்போது தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன், வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை ஒருங்கிணைப்பாளர் மு.இ. ஜாகீர் உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...