அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசு மானியம் பெற்றுத் தருவதாக மோசடி: மதுரை இளைஞர் கைது

களக்காடு அருகே அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயியிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:56 am

DIN

களக்காடு அருகே அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயியிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
களக்காடு அருகேயுள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் நம்பிராஜன் (34). விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவரை அணுகிய மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியான பிரபு என்பவர், சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்காக அரசின் மானிய உதவித்தொகையை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.74 ஆயிரத்தை வாங்கிச் சென்றாராம். ஆனால் இதுவரை மானிய உதவித் தொகையை பெற்றுத் தரவில்லையாம். பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி பிரபு மீது களக்காடு போலீஸில் நம்பிராஜன் புகார் செய்தார்.  அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து பிரபுவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.