மார்ச் மாத மின் குறைதீர் கூட்டம் நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 
அதன்படி,  மார்ச் 2இல் வள்ளியூர் கோட்ட அலுவலகம்,  6இல்  திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகம்,   9இல் சங்கரன்கோவில் கோட்ட அலுவலகம், 13இல் தென்காசி கோட்ட அலுவலகம், 16இல் திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட அலுவலகம், 23இல் கடையநல்லூர் கோட்ட அலுவலகம், 27இல்  கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம் ஆகியவற்றில் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் முற்பகல் 11 மணி முதல் கூட்டம் நடைபெற உள்ளது. 
இதில்,   மின் நுகர்வோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம்  என  திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.இளம்பரிதி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com