பாளையங்கோட்டையில் காப்பீடு ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு ஆக. 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை காப்பீடு நிறுவன கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் ஆர். மதுபால் தலைமை வகித்தார். அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ். ராமச்சந்திரன், இலச்சினை வெளியிட, முன்னாள் பொதுச்செயலர் எஸ். சிவசங்கரசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
மாநாட்டு நிகழ்வுகளை அமைப்பின் முன்னாள் பொதுச்செயலர் டி. தேவபிரகாஷ், தொடங்கி வைத்துப் பேசினார். ஆயுள் காப்பீடு கழக முதுநிலை கோட்ட மேலாளர் கே. வசந்த்குமார் வாழ்த்திப் பேசினார்.
கோட்டப் பொதுச்செயலர் சி. முத்துக்குமாரசாமி வரவேற்றார். இணைச் செயலர் என். பொன்னையா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிா்ப்பது வழக்கம்: குஷ்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது: பொது நல மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

கேரளத்தில் தோ்தல் முடிவுகள் வரும் முன்பே காங்கிரஸில் முதல்வா் பதவிக்குப் போட்டி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

