ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!

ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் நடந்த சர்ச்சை குறித்து...

News image

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை. - படங்கள்: ஜியோ ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்.

Updated On :1 மே 2026, 11:38 am

ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் நடந்த சர்ச்சை போட்டியின் போதும் அதற்குப் பிறகு விவாதங்களை எழுப்பியுள்ளது.

நேற்றிரவு குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய குஜராத் 15.5 ஓவர்களில் 158/6 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.

இந்தப் போட்டியில் 7.4ஆவது ஓவரில் அர்ஷத் கான் வீசிய பந்தை ரஜத் படிதார் அடிக்க, ஜேசன் ஹோல்டர் பிடிப்பார். இந்தக் கேட்சில் அவர் பந்தை தரையில் வைப்பதாக ஆர்சிபி ரசிகர்களும் விராட் கோலியும் கூறுகிறார்கள்.

நடுவரின் தீர்ப்பின்படி அவர் பந்தை கீழே வைக்கவில்லை என்கிறார்கள். இந்த விக்கெட்டுக்குப் பிறகு ஆர்சிபி அணி படிப்படியாக இழந்தது. விராட் கோலி நடுவரிடம் இது குறித்து விவாதிப்பார்.

சமூக வலைதளத்தில் பலரும் இது குறித்து தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.

Summary

Controversy over Rajat Patidar's Dismissal of Holder catch! Virat Kohli and RCB Fans Outraged!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.