தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சராசரி 65, ஸ்டிரைக் ரேட் 214... மிடில் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் ரஜத் படிதார்!

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் குறித்து...

News image

ரஜத் படிதார். - படம்: ஆர்சிபி

Updated On :15 ஏப்ரல் 2026, 5:35 pm IST

ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆர்சிபி அணி இன்றிரவு 7.30 மணிக்கு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

இதுவரை ஆர்சிபி அணி நான்கு போட்டிகளில் மும்பை, சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் வென்றுள்ளன. ராஜஸ்தானுக்கு எதிரான ஒன்றில் மட்டுமே தோல்வியுற்றுள்ளது.

இந்த நான்கு போட்டிகளிலும் ரஜத் படிதார் 195 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 65ஆகவும் ஸ்டிரைக் ரேட் 214 ஆகவும் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் அணிகளிலேயே பஞ்சாப் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பிறகு சிறப்பான மிடில் ஆர்டர் பேட்டராக ரஜத் படிதார் இருக்கிறார். சொல்லப்போனால், ஸ்ரேயாஸை விடவும் ஆதிக்கம் செலுத்துபவராக ரஜத் படிதார் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Rajat Patidar Dominates the Middle Order in IPL 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.