உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தொடர்ச்சியாக 2 ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைப்பீர்களா? ரஜத் படிதார் பதில்!

ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து ஆர்சிபி கேப்டன் கூறியிருப்பதாவது...

Rajat Patidar

ரஜத் படிதார். - படம்: ஆர்சிபி

Published On :

தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் கோப்பைகளை தோனி, ரோஹித் சர்மா வென்ற நிலையில், நீங்களும் இதில் இணைவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ரஜத் படிதார், “நான் அது குறித்து சிந்திக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்றிரவு 7.30 மணிக்கு இறுதிப் போட்டியில் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் மோதுகிறார்கள். இரு அணிகளுமே தலா ஒரு முறை கோப்பை வென்றுள்ள நிலையில், இரண்டாவது கோப்பை யாருக்கென்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்சிபி அணிக்கு ரஜத் படிதார் கேப்டனாகப் பொறுப்பேற்ற உடனேயே முதல்முறையாக ஐபிஎல் கோப்பை வென்று அசத்தினார். தற்போது, இரண்டாவது முறையாக வென்று வரலாறு படைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறியிருப்பதாவது:

இதற்கு முந்தைய கேப்டன்கள் இதைச் செய்திருக்கிறார்களா என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இதனை நான் செய்தாலோ அல்லது மற்றவர் செய்கிறார்கள் என்பது குறித்து நான் சிந்திப்பதே கிடையாது.

தனிப்பட்ட விதத்தில் என்னுடைய பயணமே மிகவும் ரோலர்கோஸ்டர்போல மேலும் கீழுமாக இருந்துள்ளது. அதனால், நான் அதில் கவனம் செலுத்துவதில்லை. எங்கிருந்தாலும் என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துவேன்.

முன்னோக்கிச் செல்வதோ பின்னோக்கிச் செல்வதே என்பதை நான் நினைப்பதில்லை. நான் இங்கிருக்கிறேன். இறுதிப் போட்டியில் எங்களது சிறந்த செயல்பாடுகளை வழங்க முயற்சிப்போம் என்றார்.

Summary

Will you set a record by winning two consecutive IPL titles? RCB skipper Rajat Patidar responds!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.