தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பிளே ஆஃப்ஸ் வரலாற்றில் முதல் வீரர்..! தொட முடியாத உயரத்தில் ரஜத் படிதார்!

ஐபிஎல் பிளே ஆஃப்ஸ் வரலாற்றில் வியப்பூட்டும் சாதனை நிகழ்த்தியுள்ள ரஜத் படிதார் குறித்து...

Royal Challengers Bengaluru's captain Rajat Patidar reacts after hitting a six during the Indian Premier League cricket match between Gujarat Titans and Royal Challengers Bengaluru in Dharamshala, India, Tuesday, May 26, 2026. (AP Photo/Ashwini Bhatia)

சிக்ஸர் அடித்த பிறகு ரஜத் படிதார்... - படம்: ஏபி

Published On :

ஐபிஎல் பிளே ஆஃப்ஸ் வரலாற்றில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் வியப்பூட்டுகிற வகையில் விளையாடி இருக்கிறார். 100க்கும் அதிகமான சராசரியுடன் விளையாடும் முதல் வீரராக ரஜத் படிதார் சாதனை படைத்துள்ளார்.

நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கலில் 254/5 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் ரஜத் படிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தியுள்ளார்.

இதுவரை பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் 6 இன்னிங்ஸில் ரஜத் படிதார் 338 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 112.66ஆக இருக்கிறது. ஒரு சதம் 2 அரைசதம் உடன் 193.14 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி இருக்கிறார்.

இந்த பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் 25 போர்கள், 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணியின் வரலாற்றிலேயே ரஜத் படிதார் அளவுக்கு ஒரு வீரர் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் கோப்பை வென்ற ரஜத் படிதார் நடப்பு சீசனில் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிளே ஆஃப்ஸ் வரலாற்றில் ரெய்னா 714 ரன்களுடன் முதலிடத்தில் இருக்க எம்.எஸ். தோனி 523 ரன்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் ரஜத் படிதார் 13ஆவது இடத்தில் இருக்கிறார்.

அதிகமான சராசரியுடன் ( 112.66) பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் விளையாடியவர்களில் ரஜத் படிதார் தனியொருவனாக முதலிடத்தில் இருக்கிறார். யாருமே அவருக்கு அருகில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajat patidar has one of the most remarkable stat in IPL playoffs history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.