புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி உதவியுடன் 14 சுகாதார மையங்களில் சிறப்பு கண் சிகிச்சை திட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவியுடன் 14 சுகாதார மையங்களில் விழித்திரை நோய் கண்டறியும் 

Updated On :29 மார்ச் 2018, 1:56 am

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவியுடன் 14 சுகாதார மையங்களில் விழித்திரை நோய் கண்டறியும் திட்டத்தின் கீழ் நவீன சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாராணி எலிசபெத் வைரவிழா டிரஸ்ட், இந்திய மக்கள் அடிப்படை சுகாதார இயக்ககம், அரவிந்த் கண் மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 2016-18 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயாளிகளில் காணப்படும் விழித்திரை நோய் கண்டறியும் திட்டம் 14 சுகாதார மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரவிந்த் கண் மருத்துவமனையின் கண்காணிப்பில் செயல்பட்ட இத்திட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவின்கீழ் செயல்படுத்துவதற்கான அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன் நிகழ்ச்சியில் பேசியது: இந்தியாவில் சுமார் 6 கோடி மக்கள் நீரிழிவு நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். பல்வேறு ஆய்வுகளின் கீழ் 12 முதல் 18 சதவிகித நீரிழிவு நோயாளிகள் பார்வைக் குறைபாடு அடைவது தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக்கசிவு ஏற்படுவதால் விழித்திரை பாதிக்கப்படும். ஆனால், இதுபோன்ற பார்வையிழப்பை தடுக்க வழிமுறைகள் உள்ளன. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் விழித்திரை படம் அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்டு அவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு மருத்துவர்கள் அவற்றை பார்த்துவிட்டு நோயின் தீவிரம், ஆலோசனைகள், மருந்துகளை பரிந்துரைப்பார்கள். உயர் சிகிச்சை தேவைப்படுவோர் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே, கிராமப்புற மக்கள் இத் திட்டத்தைப் பயன்படுத்தி சிறந்த கண் சிகிச்சையைப் பெறலாம் என்றார் அவர்.
அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆர்.ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சை பிரிவு மருத்துவர் ராமலட்சுமி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.