சுத்தமல்லியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது சுத்தமல்லி குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 180 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வசித்து வருகிறோம். இது தொடர்பாக கடந்த காலங்களில் மாநகர மேயர் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லாததால், பாம்பு கடித்து சிலர் இறந்திருக்கிறார்கள். எனவே ஆட்சியர் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து எங்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

