சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கொங்கந்தான்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருநெல்வேலி அருகேயுள்ள கொங்கந்தான்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On :21 மே 2018, 11:46 pm

திருநெல்வேலி அருகேயுள்ள கொங்கந்தான்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கொங்கந்தான்பாறையைச் சேர்ந்த பொன்னுதுரை மகன் ஸ்டேன்லிபாஸ்கர். இவரது மனைவியின் வீடு அதே பகுதியில் உள்ளதாம். இவர்கள் மும்பையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனராம். இந்நிலையில், இத்தம்பதியின் வீட்டில் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது திங்கள்கிழமை காலையில் தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.