திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, ஆர்.மோகன் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் அனுமதிச் சீட்டு தரும் இடத்தில் காய்ச்சல் நோயாளிகளுக்கு தனியாக கவுன்ட்டர் ஏற்படுத்த வேண்டும். பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும். மருந்து, மாத்திரைகளை தர கூடுதல் மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உத்தரவாதப்படுத்த வேண்டும். காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். சித்த மற்றும் ஹோமியோ மருந்துகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது குறித்து கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் ஏற்பாடுகளை உள்ளாட்சிகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

