அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பாளை.யில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :12 நவம்பர் 2018, 11:56 pm


தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய் துறையில் வழங்கப்படும் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே வழங்க வேண்டும்; பட்டா மாறுதல் கோப்புகளை முழுவடிவில் தயார் செய்யும் பொறுப்பை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பாளை. வட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராணி, பிரசாரச் செயலர் சுப்பிரமணியன், துணைச் செயலர் சுபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் நாராயணன், திருநெல்வேலி வட்டத் தலைவர் மணிகண்டன், மானூர் வட்டத் தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.