மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நல உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Updated On :12 நவம்பர் 2018, 11:57 pm


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,460 மதிப்பில் காதொலி கருவி, பாளையங்கோட்டை வட்டத்தில் 5 பயனாளிகள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவு, 2 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள், 12 பேருக்கு தலா ரூ.13,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா ஆகிய நல உதவிகளை அந்ததந்த துறையின் கீழ் வழங்கினார்.
மேலும், வீரகேரளம்புதூர் வட்டம், இனாம் வெள்ளக்கால் காமாட்சி அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த துரைராஜ் திருமலை என்பவர் சவூதி அரேபியாவில் மரணமடைந்ததையொட்டி, அவருடைய மனைவி தனலட்சுமிக்கு கடல் கடந்த இந்தியர் இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,66,972-க்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) மணிஷ் நாரணவரே, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மாறன், உதவி ஆணையர் (கலால்) பழனிக்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.