ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் தக்காளிப்பழம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ. 4-க்கு விலை போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் வட்டார கிராமங்களில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் தவிர மற்ற அனைத்துக் காலங்களிலும் நல்ல விளைச்சல் இருக்கும். அன்றாட தேவையைப் பொருத்து விலை நிர்ணயிப்பது வழக்கம். இங்கு விளைவிக்கப்படும் தக்காளி உள்ளூர் மட்டுமன்றி பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விளைச்சல் அதிகரிப்பால் விலையில் வீழ்ச்சியிருக்கும். கடந்த சில மாதங்களாக ரூ. 40 வரை விற்பனையான தக்காளி, சில தினங்களாக கிலோ ஒன்றுக்கு ரூ. 3 அல்லது ரூ. 4 என கொள்முதல் செய்யப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியது: தக்காளி கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 20-க்கு விற்பனையானால் தான் ஓரளவு லாபம் கிடைக்கும். ஆண்டு தோறும் விளைச்சல் அதிகமாக உள்ள போதெல்லாம் விலை கடுமையாக குறைந்துவிடுகிறது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம் என்றனர்.
ஆலங்குளத்தில் விவசாய விளை பொருள்களை சேமித்து வைப்பதற்கு குளிர்பதன கிடங்கு; தக்காளி ஜாம் தொழிற்சாலை ஆகியவை அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம்( ஒரு கிலோவுக்கு): உருளை ரூ. 25, மிளகாய் ரூ. 20, பல்லாரி ரூ. 20, உள்ளி ரூ. 20, கோஸ் ரூ. 18, கேரட் ரூ. 42, பீன்ஸ் ரூ. 26, சேனை ரூ. 24, பீட்ரூட் ரூ. 16, சேம்பு ரூ. 35, வெண்டை ரூ. 12, இஞ்சி ரூ. 100(பழையது)ரூ. 50 (புதியது), முருங்கைக்காய் ரூ. 15, காலிபிளவர் ரூ. 40, எலுமிச்சை ரூ. 40, சவ்சவ் ரூ. 40, மாங்காய் ரூ. 100, அவரைக்காய் ரூ. 14, பூண்டு ரூ. 34, கத்தரிக்காய் ரூ. 15.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

