உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நெல்லையில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில், "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; பெட்ரோல்-டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும், சாலை பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்;100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.பெருமாள், எஸ்.வண்ணமுடத்து, மரிய ஜானிரோஸ், டி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ராஜகுரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தியாகராஜன், லிக்காய் குழந்தைவேல், பேரின்பராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.