பள்ளி மாணவர்களின் கல்விக்காக, பாளையங்கோட்டை அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோயிலில் சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவர்கள் தேர்வு காலங்களில் ஞாபகசக்தியுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற வேண்டி ஸ்ரீ வித்யா ஞான சரஸ்வதி மஹா யாகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னர், சரஸ்வதி முன்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி, புஷ்பலதா பள்ளி உள்ளிட்டவற்றை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர். யாககுண்டத்தில் மாணவர்கள் தங்கள் கைகளால் சமித்துகளை ( அரசு, மாஞ்சுள்ளிகள்) நெய்யில் தொட்டு ஆவாகனம் செய்தனர். ஏற்பாடுகளை பாளையங்கோட்டை திருச்சிற்றம்பலம் வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


