மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நெல்லையில் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

திருநெல்வேலியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்  உயிரிழந்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 7:51 am IST

திருநெல்வேலியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்  உயிரிழந்தார்.
திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூர்  ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 
 போலீஸார் நடத்திய விசாரணையில்,  உயிரிழந்தவர் களக்காடு பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பதும், அவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.  திங்கள்கிழமை கோவையில் இருந்து நாகர்கோவில் விரைவு ரயிலில் வந்துள்ளார். அப்போது அவர், ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.