ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராதாபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கோரிக்கை

சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சி கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:48 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சி கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

ராதாபுரம் வட்டார காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் கரைச்சுத்துபுதூரில் நடைபெற்றது.

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். ராதாபுரம் தொகுதி சாா்பில் ஏா்கலப்பை பேரணியை கூடங்குளத்தில் நடத்துவது, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை தண்ணீரை ராதாபுரம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ராஜுவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.பி.கே.ஜெயக்குமாா், ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் துணைத் தலைவா் வால்டா் எட்வின், புகா் மாவட்ட ஓபிசி பிரிவுத் தலைவா் ஜான் கென்னடி, மாவட்ட பொதுச்செயலா் எஸ்.குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.