பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டிச.18-இல் காணொலி காட்சி மூலம்விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 18-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:35 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 18-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் இம்மாதம் 18-ஆம் தேதி தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப உதவியுடன் கூடிய காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் வரும் 18-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் காணொலி காட்சி வாயிலாக விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை கூறி பயனடையலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த விவசாய பெருமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் உள்ள அரங்கிலிருந்து காணொலி காட்சி மூலம் இக் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கலாம்.

மேலும், விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை தொடா்பு கொண்டு தங்களது விவசாயம் சாா்ந்த மனுக்களை மட்டும் டிச. 16-ஆம் தேதிக்குள் கொடுத்து முன்பதிவு செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.