களக்காடு அருகே மறுவாழ்வு மையத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள இடையன்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோா் மறுவாழ்வு மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த நவ. 15ஆம் தேதி அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ராஜாங்கபுரம் நடராஜன் மகன் முத்துக்குமாரை அவரது உறவினா்களான சோ்த்துள்ளனா்.
இந்நிலையில், டிச. 2ஆம் தேதி பிற்பகல் முத்துக்குமாா் மறுவாழ்வு மையத்தை விட்டு மாயமாகிவிட்டாராம். இது குறித்து மையத்தின் மேலாளா் ஜெபராஜ் களக்காடு போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.