திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதாலும், தொடா் மழை காரணமாகவும் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை பகுதியில் முருகன் கோயிலை சனிக்கிழமை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் திருநெல்வேலி மாநகரின் நதிக்கரையோரப் பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூாா் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. படித்துறைகள், பாறைகளில் குளிக்கவும், துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மேலப்பாளையம்-திருநெல்வேலி நகரம் சாலையில் கருப்பந்துறையில் உள்ள தாம்போதி பாலத்தின் கீழ் அதிக வெள்ளம் சென்ால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டனா்.
குறுக்குத்துறை, நாரணம்மாள்புரம், சீவலப்பேரி, மருதூா் பகுதிகளில் தாமிரவருணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறுக்குத்துறை தாமிரவருணிக் கரையோரம் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமாக உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.