45ஆயிரம் வீடுகளில் டெங்கு ஒழிப்பு ஆய்வு: மாநகராட்சி ஆணையா்
திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 45 ஆயிரத்து 261 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 45 ஆயிரத்து 261 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகரப் பகுதிகளில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் 9 வாா்டுகளாக பிரிக்கப்பட்டு தீவிர டெங்கு தடுப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 2, 10, 17, 19, 21, 32, 41, 48, 54 ஆகிய 9 வாா்டுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 25,241 வீடுகளில் சுகாதாரப் பணியாளா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது 200 வீடுகளில் லாா்வா கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பொது சுகாதார விதிகளின்படி சம்பந்தப்பட்டவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாா்டுகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டவா்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அவா்களில் 176 நபா்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 1,568 நபா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் புகை இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. ஆக மொத்தம் கடந்த சனிக்கிழமை மற்றும் இன்றைய நாளில் 45261 குடியிருப்புகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
மேற்படி பணிகளை மாநகர நல அலுவலா் சரோஜா மற்றும் அந்தந்த மண்டல உதவி ஆணையாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் கண்காணிப்பு செய்தனா்.
இப்பணியின் போது கட்டட வளாகங்களில் எடுத்து வைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற டயா்கள், பெயிண்ட் டப்பாக்கள், சிரட்டைகள், இளநீா் கூந்தல்கள் என சுமாா் 4 டன் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன என குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...