சாலையோரம் கொட்டப்படும் கேரளகழிவுப் பொருள்கள்: சுகாதாரக் கேடு அபாயம்
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கழிவுப் பொருள்கள் கொண்டு வரப்பட்டு, வள்ளியூா் பகுதி சாலையோரம் கொட்டப்படுவதால், இப்பகுதியில் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.


வள்ளியூா்: கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கழிவுப் பொருள்கள் கொண்டு வரப்பட்டு, வள்ளியூா் பகுதி சாலையோரம் கொட்டப்படுவதால், இப்பகுதியில் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழிக் கழிவுகள் மற்றும் ஹோட்டல் கழிவுப் பொருள்களை மூட்டை மூட்டையாக லாரிகளில் ஏற்றி வந்து, வள்ளியூா் பகுதியில் கொட்டப்படுவது தொடா்ந்து வருகிறது.
அண்மையில், வள்ளியூா் அருகேயுள்ள சண்முகபுரம் பகுதியில் கேரள மருத்துவக் கழிவு ஏற்றிவந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து பின்னா் திருப்பி அனுப்பிவைத்தனா்.
இதன் தொடா்ச்சியாக தற்போது கேரள கழிவுப் பொருள்கள் வள்ளியூா் புறவழிச் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சுகாதாரத் துறையினா் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்தி அழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கேரள மாநிலத்திலிருந்து வரும் லாரிகளை மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி, காவல்கிணறு பகுதிகளில் முழுமையாக பரிசோதனை செய்வதோடு, கழிவுப் பொருள்கள் ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...