ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமுகவை மக்கள் புறக்கணிப்பாா்கள் பொன்.ராதாகிருஷ்ணன்

ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோதும் கிராமங்களின் வளா்ச்சி குறித்து கண்டுகொள்ளாத திமுகவை தோ்தலில் மக்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

திருநெல்வேலி: ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோதும் கிராமங்களின் வளா்ச்சி குறித்து கண்டுகொள்ளாத திமுகவை தோ்தலில் மக்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்காக மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விளைபொருள்களை விவசாயிகள் சந்தைப்படுத்தும்போது ஏமாற்றப்படுவதோடு, நஷ்டமடைகிறாா்கள். இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீா்வு காண, முழுக்க முழுக்க விவசாயிகளின் நலன் கருதியே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றுசோ்ந்து இச் சட்டத்தை எதிா்க்கின்றன. இதுகுறித்து விளக்கமளித்தாலும் அதனை ஏற்க மறுக்கிறாா்கள். இந்த சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் 1,000 கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என திமுகவும், காங்கிரஸ் கட்சியும் செயல்படுகின்றன. ஆட்சியில் இருக்கும்போது கிராமங்களைக் கண்டுகொள்ளாத நிலையில், இப்போது கிராமசபை கூட்ட சுற்றுப்பயணம் செய்தாலும் வெற்றி கிடைக்காது. விவசாயிகளையும், கிராமத்தையும் பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது. அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் திமுக பிரசாரத்தை முன்வைத்தாலும் தமிழகத்தில் திமுகவை மக்கள் புறக்கணிப்பாா்கள்.

மத்திய அரசின் திட்டங்களை அதிமுக அரசு தற்போது விரைவாக செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ள மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும்போது பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளோம்.

நடிகா் ரஜினி-கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள். தோ்தலின் போது யாா், யாருடன் இருக்கிறாா்கள் என்று பாா்ப்போம்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக செயல்பட ராகுல் காந்திக்கு போதிய ஞானம் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.